தேர்தல் ஆணையத்துக்கும் காஸ் தட்டுப்பாடா? என்னது இட்லி 93 ரூபாயா? அநியாயம் பண்ணாதீங்க: கதறும் செல்லூர் ராஜூ

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் முன்னாள் எம்எல்ஏ, டாக்டர் சரவணன், அண்ணாதுரை, நிர்வாகி எம்எஸ்.பாண்டியன் உள்ளிட்டோர், மதுரை தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான பிரவீன் குமாரை நேற்று காலை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர். பின்னர் செல்லூர் ராஜூ, நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தல் கமிஷனிலிருந்து, தேர்தல் நேரத்தில் வேட்பாளர்கள் பயன்படுத்தும் ஸ்பீக்கர், சேர், துண்டு, கொடி, பேட்ஜ் போன்றவற்றிற்கு கட்டணம் நிர்ணயித்துள்ளனர். தேர்தல் செலவாக. ஒரு சேருக்கு ரூ.50 போட்டுள்ளனர்.

3 சேர் வாடகையான 150 ரூபாய் கொடுத்தாலே ஒரு சேர் வாங்கி விடலாம். வெளியில் வாடகை ரூ.10தான். பேப்பர் கொடிக்கு ரூ.51 போட்டுள்ளனர். இதன் அதிக விலையே ரூ.25தான். காட்டன் துணி கொடிக்கு ரூ.258 போட்டுள்ளனர். இதன் விலை ரூ.90, ரூ.100தான். இதையெல்லாம் தேர்தல் அதிகாரியான கலெக்டரிடம் சொல்லியுள்ளோம். மாநகராட்சி மண்டபம் பிடித்து ஆலோசனை கூட்டம் போட்டால் ரூ.60 ஆயிரம் செலவுக்கணக்கு போட்டுள்ளனர்.

இந்தளவு பெரிய தொகை, மாநகராட்சியிலேயே நிர்ணயிக்கவில்லை. அதிகபட்சமே ரூ.10ஆயிரம் துவங்கி ரூ.30ஆயிரத்திற்குள்தான். டவுன் பஞ்சாயத்து மண்டபத்திற்கு ரூ.15 ஆயிரம் போட்டுள்ளனர். காலை டிபனுக்கு இட்லியோ, பொங்கலோ ரூ.93 போட்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு விலைவாசி இருக்கிறது. இதையெல்லாம் குறைக்கணும் எனச் சொல்லியுள்ளோம்.

கோரிக்கையை மேலே அனுப்புவதாக சொல்லியுள்ளனர். இவ்வாறு கூறினார். தேர்தல் ஆணையம் விலை பட்டியலை பார்த்த அதிமுகவினர், அதிகாரிகள் வீட்டுக்கு காஸ் தட்டுப்பாடு இருக்கும் போல அதுதான் எங்ககிட்ட சேர்த்து காஸ் வாங்கலாம்ன்னு இருக்காங்க என கமென்ட் அடிக்கின்றனர்.

Related Stories: