×

பங்குனி பெருவிழா கபாலீஸ்வரர் கோயிலில் இன்று தேரோட்டம்

சென்னை, மார்ச் 29: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெறுகிறது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் 10 நாட்கள் நடக்கும் பங்குனி பெருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தின் போதும், அறுபத்து மூவர் திருவிழாவின் போதும், கோயிலின் 4 மாட வீதிகளில் உலா வரும் தேரோட்டத்தை காண லட்சக்கணக்கான பொதுமக்கள் சென்னை மட்டுமின்றி, பல்வேறு ஊர்களில் இருந்து வருவார்கள்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான வருடாந்திர பங்குனி பெருவிழா மற்றும் அறுபத்து மூவர் திருவிழா மார்ச் 21ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இந்த திருவிழா வரும் ஏப்ரல் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. பங்குனி விழாவின் 7ம் நாளான இன்று காலை தேரோட்டம் நடைபெறுகிறது. மேலும், 8ம் நாள் விழாவாக நாளை அறுபத்து மூவர் வீதியுலா நடைபெறுகிறது. மார்ச் 31ம் தேதி ஐந்திருமேனிகள் விழா நடக்கிறது. ஏப்.1ம் தேதி தீர்த்தவாரி நடக்கிறது. தொடர்ந்து, இரவு 8 மணிக்கு திருக்கல்யாண உற்சவத்தோடு கொடி இறக்கப்பட்டு பங்குனி விழா நிறைவு பெறுகிறது.

Tags : Panguni Festival ,Kapaleeswarar Temple ,Chennai ,Mylapore Kapaleeswarar Panguni Festival ,Mylapore Kapaleeswarar Temple ,
× RELATED விண்ணப்பத்தில் தவறுகளை தவிர்க்க...