×

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அடுக்குமாடி குடியிருப்பில் வாக்குச்சாவடி மையங்கள்

சென்னை, மார்ச் 27: தமிழகத்தில் நகர் பகுதிகளில் அதிக குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகள் வாக்குச்சாவடி மையங்களாக செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் அங்கேயே வாக்களிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட நகர் பகுதிகளில் 15 அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்குச்சாவடி மையங்கள் செயல்பட உள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:

மதுரவாயல் தொகுதியில் உள்ள 166, தமிழ்நாடு ஆல் இந்தியா சர்வீஸ் ஹவுசிங் அசோசியேஷன் காம்ப்ளக்ஸ், விருகம்பாக்கம். (இங்கு 1,303 வாக்காளர்கள் உள்ளனர்.)
அம்பத்தூர் தொகுதியில் உள்ள 46, அலையன்ஸ் ஆர்சிட்ஸ் ஸ்பிரிங், கிளப் ஹவுஸ் (சவுத் பேசிங்) வாட்டர் கேனால் ரோடு கொரட்டூர். (இங்கு 661 வாக்காளர்கள் உள்ளனர்.)
அம்பத்தூர் தொகுதியில் எண் 48, அலையன்ஸ் ஆர்சிட்ஸ் ஸ்பிரிங், வாட்டர் கேனால் ரோடு, கொரட்டூர். (இங்கு 886 வாக்காளர்கள் உள்ளனர்.)
திருவொற்றியூர் தொகுதியில் சென்னை மிடில் ஸ்கூல் நார்த் பேசிங் 8வது கிளாஸ் ரூம், டிஎன்எச்பி, ஏர் நகர், எர்ணாவூர். (இங்கு 464 வாக்குகள் உள்ளது.)
சென்னை மாவட்டம் ஆர்.கே.நகர் தொகுதியில் எண் 52, பிரின்ஸ் அபார்ட்மெண்ட், தண்டையார்பேட்டை. (இங்கு 813 வாக்காளர்கள் உள்ளனர்.)
வில்லிவாக்கம் தொகுதியில் எண் 132, கேந்திரியா வித்யாலயா பள்ளி, திருமங்கலம். (இங்கு 1125 வாக்காளர்கள் உள்ளனர்.)
விருகம்பாக்கம் தொகுதியில் எண் 11, சவுத் ஏசியன் கேஸம் குவார்டர்ஸ், கோயம்பேடு. (இங்கு 566 வாக்காளர்கள் உள்ளனர்.)
வேளச்சேரி தொகுதியில் எண் 177, செயின்ட் அந்தோணி பள்ளி, வேளச்சேரி. (இங்கு 799 வாக்காளர்கள் உள்ளனர்.)
இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூர், காஞ்சிபுரம் தொகுதிகளில், மதுரை மாவட்டம், மதுரை மேற்கு தொகுதியில், செங்கல்பட்டு தொகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளிலும் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Election Commission ,Tamil Nagar ,
× RELATED சென்னையில் உள்ள 4,079 வாக்குச்சாவடி...