சென்னை, மார்ச் 29: சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 தொகுதிகளில், நாளை முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை வேட்பு மனுக்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே பெறப்படும், என மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் வரும் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் நாளை (30ம் தேதி) முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
1881ம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின்கீழ், பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள 31ம் தேதி (செவ்வாய்க்கிழமை), ஏப்ரல் 1ம் தேதி (புதன்கிழமை), ஏப்ரல் 3ம் தேதி (வெள்ளிக்கிழமை) மற்றும் 5ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய இயலாது. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள் 6.4.2026 (திங்கட்கிழமை) ஆகும். தேர்தல் நடத்தும் அலுவலர்களால் கீழ்க்கண்ட அலுவலகங்களில் வேட்புமனுக்கள் பெறப்படும்.
ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு, தேர்தல் அலுவலர் பூங்கொடியிடம், தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம், எண்.266 டி.எச். சாலை, தண்டையார்பேட்டை என்ற முகவரியில் வேட்பு மனு அளிக்கலாம்.
பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு, தேர்தல் அலுவலர் கீதாவிடம், டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி, எண். 45, எருக்கஞ்சேரி ஹைரோடு, வியாசர்பாடி, சென்னை-39 என்ற முகவரியில் வேட்பு மனு அளிக்கலாம்.
கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு, தேர்தல் அலுவலர் சாந்தியிடம், ஒருங்கிணைந்த பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகம், எண். 239, பேப்பர் மில்ஸ் சாலை, செம்பியம், சென்னை 11, என்ற முகவரியில் வேட்பு மனு அளிக்கலாம்.
வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு, தேர்தல் அலுவலர் மைதிலியிடம், சமுதாயக் கூடம், சிட்கோ நகர், 4வது பிரதான சாலை, வில்லிவாக்கம், சென்னை-49, என்ற முகவரியில் வேட்பு மனு அளிக்கலாம்.
திரு.வி.க. நகர் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு, தேர்தல் அலுவலர் பால் பிரின்சி ராஜ்குமாரிடம், திரு.வி.க நகர் மண்டல அலுவலகம், எண்.158 ஸ்ட்ரஹான்ஸ் சாலை, பட்டாளம், சென்னை – 12, என்ற முகவரியில் வேட்பு மனு அளிக்கலாம்.
எழும்பூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு, தேர்தல் அலுவலர் சுரேஷிடம், எழும்பூர் வட்டாட்சியர் அலுவலகம், 88, மேயர் ராமநாதன் சாலை, சேத்துப்பட்டு, சென்னை – 31, என்ற முகவரியில் வேட்பு மனு அளிக்கலாம்.
ராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு, தேர்தல் அலுவலர் பன்னீர்செல்வத்திடம், ராயபுரம் மண்டல அலுவலகம், எண்.105, பேசின் பிரிட்ஜ் சாலை, ராயபுரம், சென்னை-79, என்ற முகவரியில் வேட்பு மனு அளிக்கலாம்.
துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு, தேர்தல் அலுவலர் பரிதா பானுவிடம், மாநகராட்சி சமுதாயக் கூடம், அறை எண்.60, வ.உ.சி. சாலை, சென்னை – 79, என்ற முகவரியில் வேட்பு மனு அளிக்கலாம்.
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு, தேர்தல் அலுவலர் சுகந்தியிடம், பல்நோக்கு மைய கட்டடம், 116-வது வார்டு அலுவலகம், எண்.43, புதிய எண் 22, டாக்டர். பெசன்ட் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை -5, என்ற முகவரியில் வேட்பு மனு அளிக்கலாம்.
ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிக்கு, தேர்தல் அலுவலர் வளர்மதியிடம், தேனாம்பேட்டை மண்டல அலுவலகம், எண்:4, 4 ஆவது குறுக்குத் தெரு, ஏரி பகுதி, நுங்கம்பாக்கம். சென்னை – 34, என்ற முகவரியில் வேட்பு மனு அளிக்கலாம்.
அண்ணாநகர் சட்டமன்ற தொகுதிக்கு, தேர்தல் அலுவலர் செந்தில் குமாரிடம், அண்ணாநகர் மண்டல அலுவலகம், எண்.368, 2வது குறுக்குத் தெரு, புல்லா அவென்யூ, ஷெனாய் நகர், சென்னை – 30, என்ற முகவரியில் வேட்பு மனு அளிக்கலாம்.
விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு, தேர்தல் அலுவலர் சத்திய நாராயணனிடம், 128 வார்டு அலுவலகம், எண். 77, காமராஜர் சாலை, விருகம்பாக்கம், சாலிகிராமம் பேருந்து நிலையம் அருகில், சென்னை – 92, என்ற முகவரியில் வேட்பு மனு அளிக்கலாம்.
சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு, தேர்தல் அலுவலர் வெங்கடேஷிடம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், (தெற்கு) 69/40 அண்ணாசாலை லிட்டில் மவுண்ட், கிண்டி சென்னை-32, என்ற முகவரியில் வேட்பு மனு அளிக்கலாம்.
தி.நகர் சட்டமன்ற தொகுதிக்கு, தேர்தல் அலுவலர் சரவண மூர்த்தியிடம், கோடம்பாக்கம் மண்டல அலுவலகம், எண். 64, என்.எஸ்.கே. சாலை, கோடம்பாக்கம், சென்னை-24, என்ற முகவரியில் வேட்பு மனு அளிக்கலாம்.
மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்கு, தேர்தல் அலுவலர் விஜயலட்சுமியிடம், மயிலாப்பூர் வட்டாட்சியர் அலுவகம், எண்: 28, பசும்பொன் முத்துராமலிங்கம் சாலை, ஆர்.ஏ.புரம், சென்னை-28, என்ற முகவரியில் வேட்பு மனு அளிக்கலாம்.
வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்கு, தேர்தல் அலுவலர் லட்சுமி பிரியாவிடம், தெற்கு வட்டார துணை ஆணையர் அலுவலகம், அடையாறு மண்டல அலுவலகம், எண். 115, டாக்டர் முத்துலட்சுமி சாலை, எல்.பி.சாலை, அடையாறு, சென்னை – 20, என்ற முகவரியில் வேட்பு மனு அளிக்கலாம். மேலும், வேட்புமனுக்களானது மேற்கண்ட நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே பெறப்படும். வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வின் போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திலிருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
வேட்புமனு தாக்கலின் போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திற்குள் வேட்பாளர் உட்பட 5 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். வேட்பாளர்கள் வேட்பு மனுவினை இணையவழியில் பூர்த்தி செய்திடலாம். ஆனால், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுத்தாக்கலின் போது நேரில் தாக்கல் செய்ய வேண்டும். அனைத்து வேட்பு மனுக்களும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மேற்குறிப்பிட்ட வேட்பு மனுத்தாக்கல் செய்யும் நாட்களில் நேரில் மட்டுமே தாக்கல் செய்யப்பட வேண்டும், என மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
