×

நாகை புத்தூரில் வாகன சோதனை: வேளாங்கண்ணிக்கு காரில் வந்த வெளிநாட்டவரிடம் ரூ.51,900 பறிமுதல்

 

நாகப்பட்டினம், மார்ச் 29: வேளாங்கண்ணிக்கு காரில் சுற்றுலா வெளிநாட்டை சேர்ந்தவர் உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ.51 ஆயிரத்து 900ஐ தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். நாகப்பட்டினம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட புத்தூர் ரவுண்டானாவில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் பத்மாவதி தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சென்னையில் இருந்து நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணி சென்ற சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் வெளிநாட்டில் இருந்து வேளாங்கண்ணிக்கு வந்த சிவராஜா என்பவரிடம் உரிய ஆவணம் இன்றி இருந்த ரூ. 51 ஆயிரத்து 900ஐ பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்த பணத்தை நாகப்பட்டினம் மண்டல துணை தாசில்தார் கிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர்.

 

Tags : Nagapattinam ,Velankanni ,Election Flying Squad ,Puttur Roundabout ,Nagapattinam Assembly ,
× RELATED சென்னையில் நாளை முதல் ஏப்ரல் 6ம் தேதி...