×

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கட்சியினர் வாகனங்களை விதிகளுக்கு உட்பட்டு இயக்க வேண்டும்: கட்டுப்பாடு விதிக்க தேர்தல் ஆணையம் திட்டம்

 

புதுக்கோட்டை, மார்ச் 29: அனைத்து அரசியல் கட்சியினரும் வேட்புமனு தாக்கல் மற்றும் தேர்தல் பணியின் போது வாகனங்களை பயன்படுத்துவார்கள் தேர்தல் ஆணையம் விதித்துள்ள கட்டுபாடுகளை கடைபிடிக்கவில்லை என்றால் தேர்தல் ஆணையம் கட்டாயம் நடவடிக்கை எடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 23ம் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அன்றில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் தேர்தல் ஆணையத்தின் சார்பில் நியமிக்கப்பட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் பறக்கும் படைகள் தங்களின் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதியிலும் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் தேர்தலை சுமூகமாக நடத்த திட்டமிட்டு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ளது. அன்றில் இருந்து வேட்பளர்கள் தங்கள் வேட்புமனு மற்றும் மாற்று வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்வார்கள். வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது வேட்பாளர்கள் தங்கள் ஆதரவார்களை வாகனங்களில் அழைத்து வருவார்கள். இதனால் வேட்புமனு செலுத்தும் இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனை தவிற்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதபோல் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு வேட்பாளர்கள் கிராமம் கிராமமாக தங்களுக்கு ஆதரவு திரட்டு பல்வேறு வகைகளில் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளனர். அப்போது பயன்படுத்தப்படும் வககனங்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கட்டுப்பாடுகளை விதிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

 

Tags : Election Commission ,Pudukkottai ,Tamil Nadu… ,
× RELATED சென்னையில் நாளை முதல் ஏப்ரல் 6ம் தேதி...