×

பிரச்சார வாகனம் தயார் செய்யும் பணி: தஞ்சை மாவட்டத்தில் 24 மணி நேர தீவிர சோதனையில் ஈடுபட்டு வரும் தேர்தல் கமிஷன்

 

தஞ்சாவூர், மார்ச் 29: வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் நடவடிக்கையாக தஞ்சையில் 72 பறக்கும், நிலையான கண்காணிப்பு குழுவினர் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு 24 மணி நேர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.இதன் காரணமாக கடந்த 15ம்தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் 72 பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இது தவிர போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டம் முழுவதும் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தேர்தல் கமிஷன் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு கண்காணித்து வருகிறது. உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் மற்றும் பொருட்கள் கொண்டு சென்றால் அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.

ஆவணங்களை காண்பித்த பிறகு பணம், பொருட்களை விடுவிக்கின்றனர்.
அதன்படி தஞ்சை தெற்கு வீதியில் நிலையான கண்காணிப்பு குழு மற்றும் போலீசார் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags : Election Commission ,Tanji district ,Thanjavur ,Tamil Nadu ,
× RELATED சென்னையில் நாளை முதல் ஏப்ரல் 6ம் தேதி...