×

இலுப்பைதோப்பு பஸ்ஸ்டாப் பகுதியில் ரூ.57,540 பறிமுதல்

 

பட்டுக்கோட்டை, மார்ச் 29: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் பெரியகோட்டை இலுப்பைத்தோப்பு பஸ் ஸ்டாப் அருகே எப்எஸ்டி 1 பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த மோகன் என்பவரை நிறுத்தி வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவரிடம் உரிய ஆவணமின்றி ரூ.57 ஆயிரத்து 540 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரூ.57 ஆயிரத்து 540 ரொக்க பணத்தை பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் யுவராஜிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.

Tags : Iluppaithoppu ,Pattukottai ,Thanjavur district ,1 ,Madukkur Periyakottai ,Pattukottai… ,
× RELATED சென்னையில் நாளை முதல் ஏப்ரல் 6ம் தேதி...