×

பெண்ணிடம் அத்துமீறல் ஜோதிடர் கைது

சென்னை, மார்ச் 24: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வடக்கு மாடவீதி பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி (73). இவர், அதே பகுதியில் கடந்த சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக திருமணம் மற்றும் பல்வேறு சடங்கு உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஜோதிடம் பார்த்து, நாள் குறித்து வருவதும், மேலும் நாடி பிடித்து பார்த்து அவர்களின் எதிர்காலம் குறித்து கணித்து கூறுவதுமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று சுமார் 38 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், அவரது இல்ல சுப நிகழ்ச்சிக்காக ஜோதிடம் பார்ப்பதற்காக பார்த்தசாரதியிடம் தனது மகன் மற்றும் உறவினர்களுடன் சென்றுள்ளனர். அப்போது, அந்த பெண்ணுடன் வருந்தவர்கள் அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு, அந்த பெண்ணை மட்டும் உள்ளே அழைத்து சென்று, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார், ஜோதிடர் பார்த்தசாரதியை கைது செய்து, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.

Tags : Chennai ,Parthasarathy ,Thirukkazhukundram North Madaveethi ,Chengalpattu district ,
× RELATED ரிப்பன் மாளிகை வளாகத்தில் செயல்படும்...