×

கோவில்பட்டி கோட்ட கண்காணிப்பாளர் தகவல் அஞ்சலகங்களுக்கு மார்ச் 31, ஏப்.3ல் விடுமுறை

கோவில்பட்டி, மார்ச் 27: ஒவ்வொரு மார்ச் 31ம் தேதி அன்றும் நிதியாண்டு முடிவடைந்து, புதிய நிதியாண்டு ஏப்ரல் 1ம் தேதி தொடங்கும். வரும் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அஞ்சலகங்களுக்கு வழக்கமான விடுமுறையாகும். மறுநாள் 30ம் தேதி (திங்கட்கிழமை) அஞ்சலகங்களுக்கு வேலை நாளாகும். அனைத்து சேவைகளையும் பெறலாம். அதற்கு அடுத்த நாளான 31ம் தேதி (செவ்வாய்) அன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு விடுமுறையாகும். தொடர்ச்சியாக வரும் 1.4.2026 (புதன்கிழமை) மற்றும் 2.4.2026 (வியாழக்கிழமை) பழைய நிதியாண்டு முடிவு மற்றும் புதிய நிதியாண்டு தொடக்கம் சார்பான செயல்பாட்டிற்காக எந்த ஒரு பணபரிவர்த்தனையும் அஞ்சலகங்களில் நடைபெறாது. அஞ்சலக இன்டர்நெட் மற்றும் மொபைல் பேங்கிங் சேவைகளும் செயல்படாது. 3.4.2026 அன்று புனித வெள்ளியை முன்னிட்டு அஞ்சலகங்களுக்கு விடுமுறை ஆகும். எனவே இரு விடுமுறை நாட்கள் மற்றும் இரு பண பரிவர்த்தனையில்லா நாட்கள் ஆகிய நாட்களில் பொதுமக்கள் தங்களுக்குரிய பணத்தேவையை திட்டமிட்டு அதற்கேற்றவாறு அஞ்சலகங்களை முன்னரே அணுகி பணம் செலுத்துதல் மற்றும் எடுத்தல் சேவையை பெற்றுக் கொள்ளுமாறு கோவில்பட்டி கோட்ட அஞ்சலங்களின் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார். எனினும் தபால் புக்கிங் மற்றும் பட்டுவாடா சேவைகள் 1.4.2026 மற்றும் 2.4.2026 வழக்கம்போல் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Kovilpatti ,
× RELATED அரியலூரில் ரூ.101.50 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டிடம் கட்டும் பணி