பாக்.கில் பயணிகள் ரயில் தடம் புரண்டது

லாகூர்: பாகிஸ்தான், லாகூரில் இருந்து கராச்சிக்கு நேற்றுமுன்தினம் இரவு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் லோத்ரன் என்ற இடத்தில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் பலர் காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும், மீட்பு படையினர் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். விபத்துக்குள்ளான ரயில் பெட்டியில் இருந்த 25 பேர் படுகாயமடைந்தனர். அதில் ஒருவர் நிலை மோசமாக உள்ளது. ஆனால் விபத்தில் உயிரிழப்பு எதுவும் இல்லை என்று பாகிஸ்தானில் உள்ள லோத்ரன் துணை கமிஷனர் அப்துல் ஹபீஸ் தெரிவித்தார். பெட்டிகளை இணைக்கும் சங்கிலி முறிந்ததால் இந்த விபத்து நிகழ்ந்தது என்றும் இன்ஜினுடன் இணைந்திருந்த 7 பெட்டிகள் தடம் புரண்டன என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

Related Stories: