×

‘வெல்வோம் ஒன்றாக’ எனும் முழக்கம் முழுமையுற வேண்டும் மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடவேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் வேண்டுகோள்

சென்னை: ‘வெல்வோம் ஒன்றாக’ எனும் முழக்கம முழுமையுற வேண்டும் எனவே மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடவேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விசிக தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாமல் கூட்டணியை ஆதரிக்கும் நிலை எடுத்திருப்பது ஏற்புடையதாக இல்லை. அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழ்ச் சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்ற ஒரு மகத்தான திரைக் கலைஞர். நான்கு சதவீத அளவலான வாக்கு வங்கியைக் கொண்ட ஒரு அசியல் தலைவர். அவர் நம்மோடு மனமுவந்து களத்தில் நிற்பது தான் நமது கூட்டணிக்கு நலம் பயக்கும்.

இந்தக் கூட்டணியின் முதன்மையான நோக்கம் ‘தேர்தல் மட்டுமே அல்ல’ என்பதைக் கடந்தகால நமது செயற்பாடுகள் உணர்த்தும். மக்கள் நீதி மய்யம் இத்தேர்தலில் போட்டியிடாது என முடிவெடுப்பது அவரது பெருந்தன்மையாக இருக்கட்டும். மதவெறி எதிர்ப்பில் உறுதியாக நிற்கும் கருத்தியல் வலிமையும், நான்கு சதவீத அளவில் உறுதிப்படுத்தப்பட்ட ‘வாக்கு வங்கி வலிமையும்’, தமிழ்ச் சமூகத்தில் பெரும் செல்வாக்குஎன்னும் உயரிய ‘நன்மதிப்பு வலிமையும்’கொண்ட கமல்ஹாசன், ‘அவ்வாறு விட்டு விடமாட்டோம்’ என அவரை அரவணைத்துக்கொள்ள வேண்டியது தங்களின் உயரிய மாண்பாக அமையட்டும். தொகுதிகளின் எண்ணிக்கை எதுவானாலும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள ‘டார்ச்’ சின்னத்தில்’ போட்டியிட அனுமதித்து, கூட்டணியின் மீதான நன்மதிப்பையும் தங்களின் மீதான பெருமதிப்பையும் மென்மேலும் உயர்த்திட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Justice ,Mayam ,Chief Minister ,K. MRS. ALAVAN ,STALIN ,Chennai ,Justice Ministry ,K. ,Viceroy ,Muamaalavan ,Dimuka Alliance ,
× RELATED முதல் கட்டமாக 23 பேர் அறிவிப்பு அதிமுக...