×

4 நாள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும்

சென்னை: தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடுபவர்கள், வரும் 30ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று கடந்த 15ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தேர்தல் அறிவிக்கப்பட்ட கடந்த 15ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 4 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 2026ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிடும் நாள் 30.3.2026 முதல் 6.4.2026 வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். 1881ம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின்கீழ், பொது விடுமுறையாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 31.3.2026, 1.4.2026, 3.4.2026 மற்றும் 5.4.2026 ஆகிய நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய இயலாது. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள் 6.4.2026 ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Tamil Nadu ,Election Commission of India ,CEC ,
× RELATED முதல் கட்டமாக 23 பேர் அறிவிப்பு அதிமுக...