×

காஸ் தட்டுப்பாடு செய்தியை திசை திருப்பவே தொகுதி மறுவரையறையை பாஜ கையிலெடுத்துள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: காஸ் தட்டுப்பாடு செய்தியை திசை திருப்புவதற்காகவே தொகுதி மறுவரையறையை தற்போது பாஜ கையிலெடுத்துள்ளது, என முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு: ‘கோவிட் காலத்தை போல்,’ என பிரதமர் பேசியதால், ஏற்கனவே எரிவாயு தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள் மேலும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர். பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தீவிர நடவடிக்கைகள் மூலம் இவற்றுக்கு தீர்வு காண வேண்டிய ஒன்றிய பாஜ அரசு, இதில் இருந்து செய்திகளை திசை திருப்புவதற்காகவே தொகுதி மறுவரையறையை தற்போது கையிலெடுத்துள்ளது.

பாஜ ஜாடிக்கு ஏற்ற மூடியாக, மக்கள் பிரச்னையை மறந்தும் பேசமாட்டோம் என தங்களுக்கு தாங்களே வாய்ப்பூட்டு போட்டுக்கொண்டுள்ள அதிமுகவோ, மாநில அரசு என்ன செய்கிறது எனக் கேட்கிறார்கள். சிலிண்டர் வழங்குவதும், வெளியுறவுக் கொள்கையும் மாநில அரசின் கையிலா இருக்கிறது?. மாநில அரசு தன்னால் இயன்ற அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. இத்தனைக்கும் பொறுப்பான ஒன்றிய பாஜ அரசு என்ன செய்கிறது? என்பதே மக்கள் முன்வைக்கும் கேள்வி. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Tags : BJP ,Chief Minister ,MK Stalin ,Chennai ,Covid ,
× RELATED முதல் கட்டமாக 23 பேர் அறிவிப்பு அதிமுக...