×

வேல்முருகன் தேர்தல் புறக்கணிப்பு

சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சி, இந்த சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக அக்கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். 10 கோரிக்கை மனுக்களை ஏற்காததால், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக சமீபத்தில் வேல்முருகன் அறிவித்தார். இந்நிலையில் வேல்முருகன் நேற்று காலை வீடியோ மூலம் தேர்தல் புறக்கணிப்பு முடிவை அறிவித்துள்ளார். கடலூர் மாவட்ட திமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்களில் அந்த கட்சியின் அமைச்சர்கள் முன்னணியில் அக்கட்சி நிர்வாகிகள், என்னை பற்றியும், எப்போது பார்த்தாலும் கூட்டணி கட்சிக்கு பண்ருட்டி தொகுதியை வழங்கி விடுகிறீர்கள். நாங்கள் எப்போது எம்எல்ஏ ஆவது என்றும் பேசியுள்ளனர். அதற்கு அந்த மாவட்டத்தில் உள்ள 2 அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்களை அப்படி பேசுவது முறையல்ல என்று கண்டிக்கவில்லை.

இதுபோன்ற நிகழ்வுகளை கருத்தில் கொண்டு இனி வரும் தேர்தல்களில் பண்ருட்டி தொகுதியில் நிற்க போவதில்லை. பண்ருட்டி தொகுதியை தவிர மற்ற எந்த தொகுதியிலும் நான் நிற்க போவதில்லை. வருகின்ற சட்டமன்ற தேர்தல்களில் கட்சிக்காக உழைத்த முன்னணி தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்குவது என முடிவு செய்துள்ளேன். ஒருவேளை நமக்கு பண்ருட்டி தொகுதியில் இடம் கிடைத்தாலும் கூட நமது கட்சியின் முன்னணி தலைவர்களை தான் நிறுத்துவேன். நான் கட்சி வளர்ச்சிக்காக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். விரைவில் பண்ருட்டி தொகுதியில் வேட்பாளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யுங்கள். இவ்வாறு அந்த வேல்முருகன் பேசினார்.

Tags : Velmurugan ,Chennai ,Tamil Lifetime Party ,TSA ,Akkad ,Panruti Velmurugan ,Dimuka ,
× RELATED முதல் கட்டமாக 23 பேர் அறிவிப்பு அதிமுக...