குடும்ப தகராறில் தாக்கப்பட்ட மூதாட்டி சாவு

திண்டுக்கல், மார்ச் 25: திண்டுக்கல் அருகே வெயிலடிச்சாம்பட்டியை சேர்ந்த தங்கராஜ் மனைவி பேச்சியம்மாள் (61). இவரது தங்கை சரோஜா (59), அவரது மகன் பாண்டி (36). இவர்கள் 3 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த மார்ச் 21ம் தேதி குடும்ப பிரச்னை காரணமாக பாண்டிக்கும், பேச்சியம்மாளுக்கும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த பாண்டி வீட்டில் இருந்த காற்றடிக்கும் பம்பை எடுத்து பேச்சியம்மாளை நோக்கி வீசியுள்ளார். இதில் படுகாயமடைந்த பேச்சியம்மாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் ஜிஹெச்சில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பேச்சியம்மாள் உயிரிழந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா இன்ஸ்பெக்டர் உலகநாதன், எஸ்ஐ கலையரசன் வழக்குப்பதிந்து பாண்டியை கைது செய்தனர்.

 

Related Stories: