சென்னை: கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் அதிக பயனாளர்களைக் கொண்ட டாப் 5 திட்டங்கள் என்னென்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 2,59,43,011 (சுமார் 2.59 கோடி) பயனாளர்கள் மருத்துவச் சேவைகளைப் பெற்றுள்ளனர். பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் 2,08,24,176 (சுமார் 2.08 கோடி) குடும்ப அட்டைதாரர்களுக்கு கோவிட் நிவாரணத் தொகையாக ரூ.4000 வழங்கப்பட்டது.
நில நிர்வாகத் துறையின் கீழ் இதுவரை 1,35,41,377 (சுமார் 1.35 கோடி) பயனாளர்கள் இணையதளம் வாயிலாகப் பட்டா மாறுதல் சேவைகளைப் பெற்றுள்ளனர். கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் 1,30,69,831 (சுமார் 1.30 கோடி) குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. கூட்டுறவுத் துறையின் மூலம் இதுவரை 83,07,081 (சுமார் 83.07 லட்சம்) விவசாயிகளுக்குப் பயிர்க் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், மகளிருக்கான விடியல் பயணம் (கட்டணமில்லா பேருந்து பயணம்) திட்டத்தின் கீழ் இதுவரை 866.43 கோடி பயண நடைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம் தினசரி சராசரியாக 69.52 லட்சம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
