கூடலூர், பிப். 17: கூடலூர் ஒன்றிய திமுக அலுவலகத்தில் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய அவைத் தலைவர் மூர்த்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் லியாக்கத்அலி வரவேற்றார். மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் செல்வரத்தினம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஒன்றிய துணை செயலாளர்கள் பாபு, காந்தி செல்லதுரை, பேரூர் செயலாளர் மாதேவ், முருகையா, மாவட்ட பிரதிநிதிகள் சிரிராஜா, சுப்பிரமணி, கணேசன் கலந்து கொண்டனர்.