லாலாப்பேட்டை : லாலாப்பேட்டை பகுதியில் உளுந்து சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.கரூர் மாவட்டம் லாலாபேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கருப்பத்தூர், சிந்தலவாடி, பஞ்சப்பட்டி, பாப்பக்காப்பட்டி, போத்துராவுத்தன்பட்டி, பழைய ஜெயங்கொண்டம், மகாதானபுரம், வேங்காம்பட்டி, வயலூர், வரகூர் பகுதிகளில் சுமார் 100 ஏக்கர் பரப்பரளவில் விவசாயிகள் உளுந்து சாகுபடி செய்துள்ளனர்.
உளுந்து குறைந்த காலத்தில் அதிக லாபம் தரும் பயறு வகைப் பயிராகும். 65 முதல் 75 நாட்களில் அறுவடை செயப்படும். உளுந்தில் வம்பன் 8, வம்பன் 11, கோ 5, ஏடிடீ 5 ஆகிய ரகங்கள் தமிழ்நாட்டில் அதிக மகசூல் தரக்கூடியவை.
நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண், கரிசல் மண்ணில் மானாவாரி அல்லது இறவை பாசனத்தில், விதை நேர்த்தி செய்து சாகுபடி செய்வதன் மூலம் ஏக்கருக்கு 400 முதல் 600 கிலோ வரை மகசூல் பெறலாம். தை-மாசி (ஜனவரி-பிப்ரவரி), ஆடி-ஆவணி (ஜூலை-ஆகஸ்ட்) மற்றும் புரட்டாசி (செப்டம்பர்-அக்டோபர்) மாதங்கள் சிறந்தது. மண்ணை நன்கு உழுது, ஏக்கருக்கு 5 டன் மக்கிய தொழுவுரம் இட்டு, வடிகால் வசதியுடன் தயார் செய்ய வேண்டும்.
விதைக்கவேண்டும். விதைத்த 3-வது நாளில் பெண்டிமெத்தலின் தெளித்து, 20-25 நாட்களில் ஒரு கைக்களை எடுக்க வேண்டும். மஞ்சள் தேமல் நோய் மற்றும் சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த, எதிர்ப்புத் திறன் கொண்ட வம்பன் 8 ரகத்தைப் பயன்படுத்தலாம்.
அசுவினிப் பூச்சியைக் கட்டுப்படுத்த இமிடா குளோப்ரிட் தெளிக்கலாம்.செடிகள் பழுத்து காய்கள் காய்ந்ததும் 85 நாட்களில் அறுவடை செய்து, களத்தில் காய் வைத்துப் பிரித்தெடுக்க வேண்டும். உளுந்து குறைந்த காலத்தில் லாபம் தரக்கூடிய பெயராக உள்ளதால் அதனை பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
