அரவக்குறிச்சி. பிப்.18: தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பறக்கும் படையினர் தீவிர வாகனத் தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சின்னதாராபுரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட சி.கூடலூர் பேருந்து நிறுத்தம் அருகே, நேற்று காலை 10.40 மணியளவில், பரமத்தி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரபாண்டியன் தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அரவக்குறிச்சியில் இருந்து தென்னிலை நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
