கரூர், மார்ச் 18: கரூர் மாவட்டத்தில் வாகன சோதனையில் ரூ. 5.87 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக கலெக்டர் தெரிவித்தார். கரூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட வாகன சோதனைகளில் இதுவரை ரூ.5.87 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ரவிகுமார் நேற்று கரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆண்டாங்கோவில் மேற்கு மற்றும் மொச்சக்கொட்டாம்பாளையம் பகுதிகளில், நிலையான கண்காணிப்புக் குழு மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வாகன சோதனைகளை நேரில் ஆய்வு செய்தார்.இந்திய தேர்தல் ஆணையம் ஆணைக்கிணங்க, கரூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு மாவட்ட எல்லைகள் மற்றும் முக்கிய சாலைகளில் தீவிர வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
