கேரளம்: கொட்டாரக்கரை அரசு மருத்துவமனையில் மருத்துவர் வந்தனா தாஸ் கொல்லப்பட்ட வழக்கில் ஆசிரியர் சந்தீப்புக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2023 மே 10ல் கொட்டாரக்கரை அரசு மருத்துவமனைக்கு ஆசிரியர் சந்தீப் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அறுவை சிகிச்சை கத்தியால் ஆசிரியர் சந்தீப் திடீரென தாக்கியதில் மருத்துவர் வந்தனா தாஸ் உயிரிழந்தார்.
