சென்னை: தமிழ்நாட்டுக்கு வந்துள்ள நம் விருந்தினர்களை நம் மக்கள் சார்பாக அன்போடு வரவேற்கிறேன் என தமிழ்நாட்டு மருத்துவமனைகளை ஆய்வு செய்ய உத்தரப்பிரதேச அரசு குழு அனுப்பி உள்ளதை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ளும் இந்த ஆரோக்கியமான போக்கு மென்மேலும் வளர வேண்டும் என விழைகிறேன். தமிழ்நாட்டின் திராவிட மாடல் நாடு முழுவதும் பின்பற்றப்பட்டால் இந்தியா இன்னும் விரைவாக வளர்வது உறுதி எனவும் கூறியுள்ளார்.
