சென்னை எழும்பூரில் நடைபெறும் புனரமைப்பு பணிகள் காரணமாக ரயில் சேவையில் மாற்றம்!!

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள் காரணமாக 11 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்;
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, வருகிற ஏப்ரல் 5-ம் தேதி இயக்கப்படும் ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் சேது சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில். ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில், தஞ்சாவூர் – சென்னை எழும்பூர் உழவன் எக்ஸ்பிரஸ் ரயில் , கொல்லம் – சென்னை எழும்பூர் அனந்தபுரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகிய ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைப்போல ஏப்ரல் 6-ம் தேதி இயக்கப்படும் திருநெல்வேலி – சென்னை எழும்பூர் நெல்லை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் சேது சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை எழும்பூர் – செங்கோட்டை பொதிகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை எழும்பூர் – கொல்லம் அனந்தபுரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில். சென்னை எழும்பூர் – தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகிய ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்றும். இந்த ரயில்கள் தாம்பரம் – சென்னை எழும்பூர் இடையே இயக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஏப்ரல் 6-ம் தேதி சென்னை எழும்பூர் – திருச்சி சோழன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 2.15 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: