மாநகராட்சி பள்ளியில் முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு

திருப்பூர், பிப்.16: திருப்பூர் மாநகராட்சி பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழக அரசு சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், மடிக்கணினிகள், சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. திருப்பூர் தேவாங்கபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த விலையில்லா புத்தகங்கள் கரையான் அரிப்பதாகவும், அங்கிருந்த விலையில்லா காலணிகள் வீணாகி வருவதாகவும் புகார் எழுந்தது.

இதையடுத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷ் நேற்று பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில்,`பழைய பாடப் புத்தகங்கள் தான் கரையான் அரித்திருந்தன. அவற்றை அரிக்காத வகையில் எடுத்து வைக்கச் சொல்லியிருந்தோம். அதேபோல், விலையில்லா காலணிகள் சேதம் அடைந்திருந்ததை அப்புறப்படுத்த சொல்லி உள்ளோம்’ என்றார்.

Related Stories: