வேதாரண்யம், மார்ச் 18: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த தோப்புத் துறையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் இந்து, முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை ஆரிபின் படேஷாகிப் மைதானத்தில் தன் முனைப்பு பெண்கள் ஜாமத் மன்றம் நடத்திய இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஜமாத்து மன்ற தலைவர் ஷாபி தலைமை வகித்தார். நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் இந்து நற்பணி மன்ற தலைவர் சோம வெங்கட்ராமன் மற்றும் நற்பணி மன்றத்தை சேர்ந்த வெற்றிவேல், வேதநாயகம், ரமேஷ் உள்ளிட்ட இந்து, முஸ்லிம் உள்பட 1000க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
