×

வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக அதிமுக பிரமுகர் வீட்டில் பதுக்கிய வாளிகள் பறிமுதல்: மாஜி அமைச்சர் தொகுதியில் பறக்கும் படை அதிரடி

 

திருமங்கலம், மார்ச் 18: தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நடத்தை விதிமுறைகள் அமலாகியுள்ளன. விதிமுறைகளை கண்காணிக்க பறக்கும்படையினர் தீவிர வாகனசோதனையில் ஈடுபட்டு வருகினறனர். மதுரை மாவட்டம், திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கள்ளிக்குடி அடுத்த வில்லூர் கிராமத்தில் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வாளிகள், அதிமுக பிரமுகர் ஒருவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் வந்தது. இதனைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின்படி பறக்கும்படை தேர்தல் அலுவலர் முத்துராமன் தலைமையில் சென்ற குழுவினர், வில்லூரில் உள்ள முன்னாள் கூட்டுறவு சங்கத்தலைவரும், அதிமுக பிரமுகருமான விஜயமுருகன் என்பவரது வீட்டில் இருந்த 38 வாளிகளை நேற்று பறிமுதல் செய்து திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Tags : AIADMK ,Flying Squad ,Thirumangalam ,Tamil Nadu ,Villur ,Kallikudi ,Madurai district ,
× RELATED தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு...