×

பால் வியாபாரிக்கு கத்திக்குத்து

 

சிவகாசி, மார்ச் 18: சிவகாசி அருகே ஏற்பட்ட தகராறில் பால் வியாபாரியை கத்தியால் குத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி அருகே பாரைப்பட்டியை சேர்ந்தவர் பால் வியாபாரி மகேஸ்வரன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த திருவேங்கடம் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. சம்பவத்தன்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டு மகேஸ்வரனின் கன்னத்தில் திருவேங்கடம் கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து மாரனேரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே சம்பவம் தொடர்பாக திருவேங்கடம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மகேஸ்வரன், அவரது மகன் கவுதம் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Sivakasi ,Maheswaran ,Paraipati ,Thiruvengadam ,
× RELATED சட்டமன்ற தேர்தல் காரணமாக ஊட்டியில் மலர் கண்காட்சி தாமதம்