- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மாநில மத்திய அமைச்சர்
- சென்னை
- நந்தம்பாக்கம் வர்த்தக மையம்
- ஸ்ரீஜிதேந்திரா
- பொது இயக்குனர்
- அஞ்சல் சேவைகள் வாரியம்…
சென்னை: தமிழ்நாட்டில் அஞ்சல் துறை வளர்ச்சி மற்றும் சிறந்த சேவை செய்த கிராமிய அஞ்சல் ஊழியர்கள் 10 பேரை கவுரவிக்கும் நிகழ்ச்சி நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு தபால் சேவைகள் வாரிய இயக்குனர் ஜெனரல் ஸ்ரீஜிதேந்திர குப்தா, தமிழ்நாடு தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மரியம்மா தாமஸ் ஆகியோர் முன்னில வகித்தனர்.
ஒன்றிய அரசின் கிராமப்புற மேம்பாடு மற்றும் தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் சந்திர சேகர் பெம்மசானி கலந்து கொண்டு தபால் துறையில் சிறந்து விளங்கிய 10 கிராமிய தபால் ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார்.
பின்னர் ஓன்றிய இணை அமைச்சர் பேசியதாவது: இன்று இந்திய தபால் துறையின் ஆண்டு வருமானம் சுமார் ரூ30,000 கோடி ஆனால் கடந்த வருட செலவு ரூ.38,000 கோடி பற்றாக்குறை உள்ளது. ஆனால் நல்ல செய்தி என்னவென்றால் முன்பு ஆண்டுக்கு சுமார் ரூ.200 கோடி வருமான வளர்ச்சி இருந்தது.
ஆனால் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ரூ.2,000 கோடி வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது 10 மடங்கு வளர்ச்சி. தமிழ்நாடு நாட்டில் அதிக வருமானம் ஈட்டும் மாநிலம். தமிழ்நாடு சுமார் 16% வளர்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஆண்டு வருமானம் ரூ.1,350 கோடி இருந்தது. இந்த ஆண்டு அது ரூ.1,800 கோடி வரை செல்ல வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
