×

அரசு அலுவலகங்களில் மகளிருக்கு உணவருந்தும் அறை, உடை மாற்றும் அறை: அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

 

சென்னை: தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்கம் சார்பில் ‘உலக மகளிர் தின விழா’ நடந்தது. மாநில தலைவர் எஸ்.மதுரம் தலைமை தாங்கினார். அகில இந்திய தலைவர் கே.கணேசன் முன்னிலை வகித்தார். மாநில மகளிர் அணி செயலாளர் அ.ஆபிதம்மாள் வரவேற்றார்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து துறைகளிலும் பணியாற்றுகின்ற மகளிர்களுக்கு உணவருந்தும் அறை, உடை மாற்றும் அறை, குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை தனியாக வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் பணியாற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு மகளிருக்கான சீருடை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Tags : Chennai ,World Women's Day Ceremony ,Tamil Nadu State Central Association of Government Office Assistants and Basic Personnel ,S. Madurai ,India ,President ,K. Ganesan ,
× RELATED நாவலூரில் காஸ் கசிவால் பயங்கரம்:...