×

நோயாளிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் சுகாதார அமைப்புகளின் கூட்டமைப்பு மாநாடு: 2,500 மருத்துவ துறை தலைவர்கள் பங்கேற்பு

 

சென்னை: நோயாளிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் அங்கீகாரம் பெற்ற சுகாதார அமைப்புகளின் கூட்டமைப்பு 10வது மாநாடு நடந்தது. இதில் 2,500 மருத்துவ துறை தலைவர்கள் பங்கேற்றனர். இந்தியாவின் முன்னணி மாநாடான ‘அங்கீகாரம் பெற்ற சுகாதார அமைப்புகளின் கூட்டமைப்பு’ (CAHOCON) 10வது மாநாடு கடந்த 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடந்தது. நோயாளிகளின் பாதுகாப்பு, மருத்துவ தரம், அங்கீகாரம் மற்றும் டிஜிட்டல் மாற்றம் குறித்து விவாதிக்க, 200க்கும் மேற்பட்ட சர்வதேச பிரதிநிதிகள் உள்பட 2,500 மருத்துவத் துறை தலைவர்கள், மருத்துவர்கள், நிர்வாகிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.

‘தொழில்நுட்பம்,தொடர்பு, நம்பிக்கை – புதிய சுகாதாரக் குறியீடு’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு, நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் மருத்துவத் தரத்தை மேம்படுத்துவதை இந்த மாநாடு முன்னிலைப்படுத்துகிறது. மாநாட்டோடு சேர்ந்து, முன்னணி மருத்துவ உபகரண உற்பத்தியாளர்கள், டிஜிட்டல் சுகாதார நிறுவனங்கள், மருந்து நிறுவனங்கள் மற்றும் சேவை வழங்குநர்களின் நவீன தயாரிப்புகள் மற்றும் சேவைகளைக் காட்சிப்படுத்தும் சுமார் 150 அரங்குகளைக் கொண்ட ஒரு மாபெரும் சுகாதார கண்காட்சியும் நடைபெறும்.

இது தொடபர்பாக கூட்டமைப்பு தலைவர் டாக்டர் விஜய் அகர்வால் பேசியதாவது: கடந்த பத்தாண்டுகளில், இந்தியா முழுவதும் சுகாதாரத் தரம் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒரு ஆற்றல் மிக்க தேசிய இயக்கமாக இந்த கூட்டமைப்பு வளர்ந்திருக்கிறது. தொடர்ச்சியான பயிற்சி, அங்கீகாரம் பெறுவதற்கான ஆதரவு, அறிவுப் பகிர்வுத் தளங்கள் மற்றும் கூட்டு முயற்சிகள் மூலம், மருத்துவச் சேவையின் ஒவ்வொரு அம்சத்திலும் தரமும் பாதுகாப்பும் இருக்கும் ஒரு கலாச்சாரத்தை உருவாக்க நாங்கள் முனைப்புடன் பணியாற்றி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Healthcare Consortium Conference ,Chennai ,10th Conference ,Consortium of Accredited ,Healthcare Consortiums ,India ,Consortium ,of Accredited ,Healthcare Consortiums' ,CAHOCON ,
× RELATED நாவலூரில் காஸ் கசிவால் பயங்கரம்:...