வெள்ளகோவிலில் இன்று ரெப்கோ ஹோம் பைனான்ஸ் சார்பில் வீட்டு வசதிக்கடன் சிறப்பு முகாம்

திருப்பூர்,பிப்.11: ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் வெள்ளகோவிலில் முத்தூர் ரோடு, பஸ் நிலையம் எதிரில் உள்ள அலுவலகத்தில் வீட்டு வசதிக்கடன் சிறப்பு முகாம் இன்று 11ம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. சிறப்பு முகாமில் டிடிசிபி அப்ரூவல் வீட்டு மனை வாங்க, வீடு கட்ட, வீடு மற்றும் அடுக்குமாடி கட்டிடம் வாங்க, வீடுபழுது பார்க்க மற்றும் விஸ்தரிக்க, வணிக வளாகம், திருமண மண்டபம், வர்த்தக கட்டிடங்கள் கட்ட, நிலுவையில் உள்ள அதிக வட்டி வீட்டு வசதி கடனை மாற்றிக்கொண்டு கூடுதல் தொகையைப் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  முகாமிற்கான ஏற்பாடுகளை வங்கி மேலாளர் கார்த்திகேயன், துணை மேலாளர் பாலகுமார், வங்கி அதிகாரிகள் செய்து வருகிறார்கள். மேலும் விவரங்களுக்கு 8939942884 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Related Stories: