மாற்றுத்திறனாளிகள் போராட்டம் வாபஸ்

அவிநாசி,பிப்.11: மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகையை ரூ.3 ஆயிரமாகவும், அதிகளவு  பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்க  வேண்டும். தனியார் துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத வேலை வாய்ப்பு  உத்தரவாதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர்  உரிமைகளுக்கான சங்கத்தினர் அவிநாசி, தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் கடந்த 9ம் ேததி  காலை முதல் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தாராபுரத்தில் நேற்று 2வது நாளாக காத்திருப்பு போராட்டத்திற்கு தாராபுரம்  எம்.எல்.ஏ. காளிமுத்து நேரில் வந்து தனது ஆதரவை தெரிவித்ததுடன் எதிர்வரும்  சட்டமன்ற கூட்டத்தொடரில் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் குறித்து  கேள்வி நேரத்தில் குரல் எழுப்புவதாக கூறினார். அரசு தரப்பில் இருந்து  உறுதியான பதில் வராததால் மாற்றுத்திறனாளிகள் நேற்று தங்களது போராட்டத்தை  தொடர்ந்தனர். அதன்பிறகு, விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளபடும் என தமிழக  அரசு அறிவித்ததை அடுத்து நேற்று மாலை மாற்றுத்திறனாளிகள் தங்களது  போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

Related Stories: