போர் எதிரொலியாக மூலப்பொருட்கள் விலை உயர்வால் திருப்பூரில் சாய ஆலைகள் மூடப்படும் அபாயம்!!

திருப்பூர்: போர் எதிரொலியாக மூலப்பொருட்கள் விலை உயர்வால் திருப்பூரில் சாய ஆலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போர் காரணமாக மூலப்பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மூலப் பொருள்கள் விலை உயர்ந்துள்ளது. இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக மூலப்பொருட்கள் விலை உயர்வால் துணிகளுக்கு சாயமிட கிலோவுக்கு ரூ.20 உயர்ந்தது. திருப்பூரில் இயங்கி வரும் 80% சாய ஆலைகளில் அடுத்து வரும் 10 முதல் 15 நாட்களுக்கான சாயங்கள் மட்டுமே இருப்பு உள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போர் நீடித்தால் அடுத்த 15 நாட்களுக்குப் பிறகு சாய ஆலைகள் முடங்கும் அபாயம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: