வரும் 2 நாட்கள் மட்டுமே உணவகங்கள் செயல்படும்: திருப்பூர் மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம்

திருப்பூர்: வரும் 2 நாட்கள் மட்டுமே உணவகங்கள் செயல்படும், தக்காளி சாதம், கிச்சடி போன்ற தயார் நிலை உணவு தான் செய்ய முடியும் என திருப்பூர் மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க செயலாளர் நாகராஜன் திருப்பூரில் பேட்டி அளித்தார். மேலும் அவர் அளித்த பேட்டியில்; சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக கடையை அடைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தினசரி 2 லட்சம் பேர் உணவகத்தை நம்பி உள்ளனர். இதில் 50 ஆயிரம் பேர் முழுமையாக ஓட்டல்களை மட்டும் நம்பி உள்ளனர்.

அடுத்த 2 நாட்கள் மட்டுமே உணவகத்தை நடத்த முடியும். விறகு அடுப்பு வைத்து செய்ய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளது. 1500 சிலிண்டர்கள் தினசரி தேவைப்படும் நிலையில் தட்டுப்பாடு காரணமாக அனைத்து வகை உணவுகளும் செய்ய முடியாது. தக்காளி சாதம் போன்ற உணவுகள் தான் கிடைக்கும். அனைத்து உணவகங்களும் கேஸ் அடுப்பு வைத்து அதற்கான வசதிகள் செய்துள்ள நிலையில் விறகு அடுப்பு மூலம் அனைத்து வகையான உணவுகள் செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: