×

5 பந்துகளில் தொடர்ந்து 5 விக்கெட் 254 ஆண்டு சாதனை: ராண்டல் அமர்க்களம்: மேஜிக் நிகழ்த்திய நியூசி. வீரர்

 

மெக்லீன் பார்க்: நியூசிலாந்தின் மெக்லீன் பார்க் நகரில் நடந்த முதல்தர கிரிக்கெட் போட்டியில் சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணி வீரர் பிரெட் ராண்டெல் 5 பந்துகளில் தொடர்ந்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தி, 254 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் மகத்தான புதிய சாதனைய அரங்கேற்றி உள்ளார். சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் – நார்தர்ன் டிஸ்ட்ரிக்ஸ் அணிகள் இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்தது. முதல் இன்னிங்சை ஆடிய சென்ட்ரல் அணி 373 ரன்கள் குவித்தது. பின்னர், நார்தர்ன் அணி ஆடியபோது, சென்ட்ரல் அணிக்காக ஆடிய பிரெட் ராண்டெல், அவரது 2வது ஓவரின் கடைசி பந்தில் ஹென்றி கூப்பரை வீழ்த்தினார்.

அவரது அடுத்த ஓவரின் முதல் பந்தில் முன்னாள் நியூசிலாந்து டெஸ்ட் துவக்க வீரர் ஜீத் ராவலை வீழ்த்தி ரசிகர்களின் உற்சாக கரவொலி பெற்றார். அதைத் தொடர்ந்து மேலும் 3 வீரர்கள் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்ந்து பெவிலியன் திரும்பினர். தொடர்ச்சியாக 5 பந்துகளில் 5 பேரை வீழ்த்திய ராண்டெல், கிரிக்கெட் போட்டியின் 254 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக, அரிதான, மகத்தான சாதனையை அரங்கேற்றினார். கடந்த 1772ம் ஆண்டு முதல் இதுவரை நடந்த முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை யாரும், தொடர்ந்து 5 பந்துகளில் 5 பேரை அவுட்டாகியதே இல்லை என, கிரிக்கெட் வரலாற்று புள்ளியியல் நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.

ராண்டெல், அந்த இன்னிங்சில் அடுத்த ஓவரில் மேலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது வல்லமையை நிரூபித்தார். மொத்தத்தில் 25 ரன்கள் மட்டுமே தந்த அவர் 7 விக்கெட்டுகளை சாய்த்தார். இது, அவரது 9 ஆண்டுகால முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த சாதனை. அவரது அட்டகாச பந்து வீச்சால் நார்தர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணி 82 ரன்னுக்கு சுருண்டது.

Tags : Randall Field ,New Zealand ,McLean Park ,Central Districts ,Fred Randall ,McLean Park, New Zealand ,
× RELATED ஐபிஎல் 2026 போட்டிகள் வரும் 28ம் தேதி துவங்கும்: பிசிசிஐ அறிவிப்பு