×

ஐபிஎல் 2026 போட்டிகள் வரும் 28ம் தேதி துவங்கும்: பிசிசிஐ அறிவிப்பு

 

புதுடெல்லி: ஐபிஎல் 2026 போட்டிகள், வரும் 28ம் தேதி துவங்கவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வரும் ஐபிஎல் 2026 போட்டிகள் வரும் 28ம் தேதி துவங்கவுள்ளன.

பிசிசிஐயின் இந்த அறிவிப்பை, ஐபிஎல் போட்டிகளை அதிகாரப்பூர்வமாக ஒளிபரப்பவுள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உறுதி செய்துள்ளது. அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான உலகக் கோப்பை டி20 போட்டிகள் நேற்று முன்தினம் இரவு துவங்கும் முன் இதற்கான அறிவிப்பு வெளியானது.

போட்டி நடக்கும் நாட்கள், இடங்கள் உள்ளிட்ட பிற விபரங்கள் ஐபிஎல் நிர்வாகத்தால் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் போட்டிகளின் நடப்பு சாம்பியனாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உள்ளது.

அந்த அணி மோதும் போட்டிகளில் 5, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் என்பதை கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்க செயலாளர் சந்தோஷ் மேனன் இம்மாத துவக்கத்தில் உறுதி செய்திருந்தார். மேலும், ஐபிஎல் இறுதிப் போட்டியும், பிளே ஆப் போட்டிகளில் ஒன்றும் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கும் என அவர் தெரிவித்திருந்தார்.

Tags : IPL 2026 matches ,BCCI ,New Delhi ,IPL 2026 ,
× RELATED 3வது முறையாக கோப்பையை வென்று இந்தியா...