- இந்தியன் வெல்ஸ் டென்னிஸ்
- அமண்டா மிராண்டா ரடுகானு
- இந்தியன் வெல்ஸ்
- அமண்டா அனிசிமோவா
- இந்தியன் வெல்ஸ் ஓபன் பெண்கள்
- இந்தியன்
- வெல்ஸ், அமெரிக்கா
- இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ்...
இண்டியன் வெல்ஸ்: இண்டியன் வெல்ஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் நேற்று, அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிசிமோவா அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். அமெரிக்காவின் இண்டியன் வெல்ஸ் நகரில், இண்டியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் 3வது சுற்றுப் போட்டி ஒன்றில் அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிசிமோவா, பிரிட்டன் வீராங்கனை எம்மா ராடுகனு மோதினர். துவக்கம் முதல் சூறாவளியாய் சுழன்றாடிய அமண்டாவின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் எம்மா திணறினார்.
அதனால், 6-1, 6-1 என்ற நேர் செட்களில் வென்ற அமண்டா, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு எளிதில் முன்னேறினார். மற்றொரு போட்டியில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவோலினி, ஆஸ்திரேலிய வீராங்கனை அஜ்லா டோமல்ஜனோவிக் மோதினர். இரு வீராங்கனைகளும் சளைக்காமல் போட்டி போட்டு புள்ளிகளை குவித்தனர். எனவே, முதல் இரு செட்களை ஆளுக்கொன்றாக வசப்படுத்தினர். இருப்பினும், 3வது செட்டில் சுதாரித்து ஆடிய பவோலினி எளிதில் அந்த செட்டை கைப்பற்றினார். அதனால், 7-5, 5-7, 6-1 என்ற செட் கணக்கில் வென்ற பவோலினி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
* சீறிப்பாய்ந்த சின்னர் ஆறி அடங்கிய ஜோவா
இண்டியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் நேற்று, இத்தாலியை சேர்ந்த உலகின் 2ம் நிலை வீரர் ஜானிக் சின்னர், கனடாவின் டெனிஸ் ஷபலோவ் உடன் மோதினார். துவக்கம் முதல் சீறிப்பாய்ந்து ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய சின்னர், 6-3, 6-2 என்ற நேர் செட்களில் டெனிஸை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார். அவர் நாளை நடக்கும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் பிரேசில் வீரர் ஜோவா ஃபொன்சேகா உடன் மோதவுள்ளார்.
