×

ஜனாதிபதி பயணத்தில் விதிமீறல் ஒன்றிய அரசுக்கு மே.வங்கம் அறிக்கை

 

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் குடியரசு தலைவர் வருகையின்போது நடந்த விதிமீறல்கள் குறித்து மேற்குவங்க அரசு ஒன்றிய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை நடந்த சந்தால் பழங்குடியின நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டார். அப்போது அவரை வரவேற்க முதல்வர் மம்தா பானர்ஜி, அமைச்சர்கள் செல்லாதது மற்றும் பல்வேறு விதிமீறல்கள் நடந்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்கும்படி மேற்குவங்க தலைமை செயலாளர் நந்தினி சக்ரவர்த்திக்கு ஒன்றிய உள்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் விதிமுறைகளை மீறியதாக கூறப்படும் சம்பவங்கள் குறித்து உரிய ஆதாரங்களுடன் மேற்குவங்க தலைமை செயலாளர் நந்தினி சக்ரவர்த்தி ஒன்றிய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகனுக்கு நேற்று அறிக்கை அனுப்பினார்.

Tags : West Bengal ,Union government ,Kolkata ,West Bengal government ,President ,Draupadi Murmu ,Santhal tribal ,
× RELATED ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை 115...