×

வர்த்தக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இன்று முதல் ஓட்டல்கள் மூடல்: பெங்களூரு ஓட்டல் சங்கம் அறிவிப்பு

 

பெங்களூரு: மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது போர் நடத்தி வருகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதையடுத்து வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலையை ஒன்றிய அரசு ரூ.115 உயர்த்தியது. இந்நிலையில் இறக்குமதி குறைந்ததால் வர்த்தக சிலிண்டர் வினியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பெங்களூரு ஓட்டல்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், ‘வர்த்தக காஸ் சிலிண்டர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஓட்டல்கள் நிர்வாகம் கடும் பிரச்னையை சந்தித்துள்ளது. ேமலும் ஆயில் நிறுவனங்கள் தங்கள் அறிக்கையில் 70 நாட்கள் வரை வர்த்தக காஸ் சிலிண்டர் வினியோகத்தில் தட்டுப்பாடு நிலவும் என்பதால் வினியோகத்தை நிறுத்துவதாக கூறியள்ளது. இதனால் ஓட்டல் தொழில் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.

எனவே மார்ச் 10(இன்று) முதல் பெங்களூருவில் ஓட்டல்களை மூடுவது என முடிவு செய்துள்ளோம். இதனால் அன்றாடம் ஓட்டல்களில் சாப்பிடும் பொதுமக்கள், மூத்தகுடிமக்கள், வேலைக்கு செல்வோர், மாணவர்கள் பாதிக்கப்படுவர். ஒன்றிய அரசு உடனடியாக இப்பிரச்னையில் தலையிட்டு வர்த்தக காஸ் சிலிண்டர்கள் தடையின்றி வினியோகம் செய்ய வேண்டும் என்று ஓட்டல் நிர்வாகத்தினர் சார்பில் கோரிக்கை வைக்கிறோம்’ என குறிப்பிட்டுள்ளனர்.

Tags : Bengaluru Hotel Association ,Bengaluru ,Iran ,Middle East ,Union government ,
× RELATED மம்தாவுக்கு தண்ணி காட்டிய பா.ஜ