×

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை 14ம் தேதி திறப்பு

 

திருவனந்தபுரம்: பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 14ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி மாத பூஜைகள் வரும் 15ம் தேதி தொடங்குகின்றன. இதை முன்னிட்டு முந்தைய நாளான 14ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடை திறப்பார். அன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.

மறுநாள் (15ம் தேதி) முதல் 19ம் தேதி வரை தினமும் உஷபூஜை, கணபதி ஹோமம் உள்பட வழக்கமான பூஜைகளுடன் உதயாஸ்தாமன பூஜை, படிபூஜை உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில் தினமும் நெய்யபிஷேகமும் நடைபெறும். 19ம் தேதி இரவு 10 மணிக்கு சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் பங்குனி மாத பூஜைகள் நிறைவடையும். தரிசனத்திற்கும், சன்னிதானத்தில் தங்குவதற்கான அறைகளுக்கும் பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

Tags : Sabarimala temple ,Panguni ,Thiruvananthapuram ,Sabarimala Ayyappa temple ,
× RELATED மம்தாவுக்கு தண்ணி காட்டிய பா.ஜ