- மோடி
- டிரம்ப்
- பெங்களூர்
- அகில இந்திய காங்கிரஸ்
- ஜனாதிபதி
- மல்லிகார்ஜுனா கர்கே
- கலுபர்கி, கர்நாடகா
- எங்களுக்கு
- ஜெஃப்ரி எப்ஸ்டீன்
- ஐக்கிய மாநிலங்கள்
பெங்களூரூ: கர்நாடக மாநிலம் கலுபுர்கியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு சர்வாதிகாரி, அவருக்குப் பிரதமர் மோடி ஒரு அடிமை போலச் செயல்படுகிறார். அமெரிக்காவின் ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ரகசியக் கோப்புகளைக் காட்டி, டிரம்பால் மோடி கட்டுப்படுத்தப்படுகிறார். இந்தக் கோப்புகளுக்குப் பயந்துதான் மோடி வாய்மூடி மவுனமாக இருக்கிறார்.
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் நமது இந்திய விவசாயிகளைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. அமெரிக்கா நமது பொருட்கள் மீது வரி விதிக்கிறது, ஆனால் அமெரிக்கப் பொருட்கள் இந்தியா வரி விதிக்க அந்நாடு தடை விதித்துள்ளது. 65 சதவீத விவசாயிகள் உள்ள இந்தியாவை, இத்தகைய நட்பின் மூலம் அமெரிக்காவின் நலன்களுக்காக மோடி அடகு வைத்து வருகிறார்.
உலக நாடுகளின் தலைவர்கள் அச்சுறுத்தப்படுவது உலக அமைதிக்குக் கேடு விளைவிக்கும். இந்தியப் பெருங்கடலில் அமெரிக்காவால் ஈரான் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் மோடி அரசின் உண்மையான பலவீனத்தையே காட்டுகிறது. நாடு இவ்வளவு சர்வதேசச் சிக்கல்களைச் சந்திக்கும் வேளையில், பிரதமர் மோடி எதைப் பற்றியும் கவலைப்படாமல் அசாம், மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு எனத் தேர்தல் பிரசாரங்களில் மட்டுமே மும்முரமாக இருக்கிறார். 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவை மோடி அரசு பலவீனப்படுத்தி வருகிறது. இந்த அரசு நீடித்தால் நாடு முன்னேறாது என்றார்.
