×

விஜய்யை பின் தொடர்ந்ததால் விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்: மருத்துவ செலவை பார்த்துக்கொள்வதாகவும் அறிவிப்பு

சென்னை: நடிகர் விஜய்யை பின் தொடர்ந்ததால் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கல்லூரி மாணவர்களை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தஞ்சையில் நடந்த தனது கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தவெக தலைவர் விஜய் சென்றார். சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு சென்ற அவர், அங்கிருந்து கார் மூலம் தஞ்சாவூர் சென்றார். அப்போது அவரை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அவரது ரசிகர்களான விக்னேஷ், ஆரோன் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் விஜய்யின் வாகனத்தை பின்தொடர்ந்து சென்றனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி 2 பேரும் படுகாயம் அடைந்தனர். 2 பேரும் தஞ்சாவூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களிடமோ அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களிடமோ விஜய் தொலைபேசியில் கூட அழைத்து நலம் விசாரிக்கவில்லை. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனைக்கே நேரில் சென்று 2 பேரிடம் நலம் விசாரித்தார். அப்போது அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும். நலம் விசாரித்ததோடு மட்டுமல்லாமல் மருத்துவச் செலவைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.

நான் பார்த்துக் கொள்கிறேன் எனக் கூறி பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோருக்கு தைரியம் அளித்தார். அமைச்சரின் அன்பில் மகேஷின் பேச்சு பெற்றோருக்கு ஆறுதலை அளித்துள்ளது. அரசியல் ரீதியாக ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் அன்பில் மகேஷின் இந்த நலம் விசாரிப்பு சந்திப்பு, தஞ்சாவூர் பகுதி தவெகவினர் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது. அமைச்சரின் இந்த செயல் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது. தனது கட்சிக் காரர்களின் மரணத்திற்கும், விபரீதத்திற்கும் பொறுப்பேற்காமல் இரங்கலோ அல்லது ஆறுதலோ சொல்லாமல் விஜய் அவர் போக்கில் இருந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷின் செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Tags : Minister ,Anbil Mahesh ,Vijay ,Chennai ,Minister Anbil Mahesh ,Thaweka ,Thanjavur ,Chennai… ,
× RELATED நடிகர் விஜயை பின் தொடர்ந்ததால்...