திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் வாசுகி ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது: நடிகர் விஜய் தனது அரசியல் உரைகளில் நாட்டு மக்களின் எதார்த்தமான வாழ்வாதாரப் பிரச்னைகளை பேசுவதில்லை. மாறாக, வெறும் `பஞ்ச்’ வசனங்களை மட்டுமே பேசி வருகிறார். இளைஞர்கள் சமூக மாற்றத்தை நோக்கிச் சிந்திப்பதை, இடதுசாரி சித்தாந்தங்களை நோக்கித் திரும்புவதையும் தடுக்கும் வேலையையே விஜய் செய்து வருகிறார்.
குறிப்பாக, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஒன்றிய அரசின் சட்டங்கள் குறித்து எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் விஜய் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார். நாட்டில் தலித் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நிகழும் ஒடுக்குமுறைகளை அவர் கண்டுகொள்வதே இல்லை. வெறும் மேடை பேச்சோடு அவரது அரசியல் நின்றுவிடுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
