×

மனைவி-பிள்ளைங்களை கூட பார்க்க விடாமல் தடை போடுவதா? விஜய்க்கு பெண்கள் ஆதரவு கலாச்சார சீர்கேடு என்ன பண்ணாலும் ஏத்துப்பாங்கன்னு ஆணவமா

 

* பெண்ணியம் பேசி, கண்ணியம் இல்லாம நடிகையோட ஜோடியா வர்றாரு
* மக்களை முட்டாள்ன்னு நினைச்சுட்டாரா?
* டார் டாராக கிழித்த தவெக நிர்வாகி ரஞ்சனா நாச்சியார்

தவெக தலைவர் விஜய், ஒரு நடிகையுடன் திருமணம் தாண்டிய உறவில் இருக்கிறார். இதை கேட்டதால் என்னை கொடுமைப்படுத்துகிறார் என பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்து உள்ளார். இதையடுத்து, ஒரு திருமண விழாவில் திரிஷாவுடன் விஜய் ஜோடி போட்டு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய்யின் இந்த செயலுக்கு முட்டுக்கொடுத்து வந்த விர்ச்சுவல் வாரியர்ஸே கடுப்பாகி விஜய்யை தாக்க தொடங்கினர். மேலும், தீவிர ரசிகர்களும் விஜய்யை திட்ட தொடங்கினர்.

சில நாட்களுக்கு முன் மாமல்லபுரத்தில் மகளிர் தின விழாவில் பேசிய விஜய், ‘‘சில பிரச்னைகள் போயிட்டு இருக்கு. இதை நினைச்சி நீங்க பீல் பண்ணாதீங்க… இதெல்லாம் வொர்த் இல்ல’’ என்று கூறினார். மனைவி விவாகரத்து வொர்த் இல்லை என்று அவர் பேசியது மக்கள் மத்தியில் மட்டுமில்லாமல் பெண்கள் மற்றும் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில், தவெக பெண் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் வெளியிட்ட அறிக்கையில், தவெக சார்பாக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

அந்த மேடையில், விஜய்க்கும் அவரது மனைவிக்கும் இடையே நிலவிவரும் பிரச்னையை நேரடியாகச் சொல்லாமல், கோடிட்டுக் காட்டும் விதத்தில் குறிப்பிட்டிருந்தது. அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக்கொள்கிறேன். அது வொர்த்தே இல்லை என்று கூறினீர்கள். அந்த ஒரு வாக்கியம் தான் இன்று பல கேள்விகளை எழுப்புகிறது. எது வொர்த் இல்லை தலைவா? உங்கள் மனைவியா? அல்லது உங்கள் திருமண வாழ்க்கையா?’’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஞ்சனா நாச்சியார் கூறியதாவது: விஜய்க்கு பெண்கள் ஆதரவு தெரிவிப்பது கலாச்சார சீர்கேடு. விவாகரத்தைத் தப்பான வார்த்தைனு சொல்ற அளவுக்கு இன்னைக்கு யாரும் இல்ல. எல்லாரும் ஏத்துக்கிட்டோம். பெரிய பிரபலங்கள் உள்பட எல்லாருமே 2வது திருமணம் செய்துள்ளார்கள். தவெக தலைவர் விஜய் விவாகரத்து பண்ணாலும் அது தப்புல்ல. அதற்குப் பிறகு வேற ஒரு திருமணம் செய்தாலும் அதை யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை. அவர் மனைவி விவாகரத்து வேணும்னு மட்டும் கேட்கல. அவங்க ஒரு வீட்ல வாழ்றதுக்கு இடம் வேணும்ன்னு கேக்குறாங்க.

அந்த வீட்ல வாழ்றதுக்கு எனக்கு உரிமை இல்லையா? வீடு இல்லாம தவிக்கிறதா அவரோட மனைவி சொல்றாங்க. அதுக்கு என்ன பதில் இருக்கு? அவரோட பிள்ளைகள் வெளிய விடுதியிலும், தனியா வீடு எடுத்தும் இருக்காங்க. இது சரியான ஒரு குடும்ப வாழ்க்கையான அமைப்பு இல்லை. இத எதுக்கு நம்ம கேட்டுட்டு? அப்படிதான் நானும் இருந்தேன். ஆனா வந்து இவ்வளவு பிரச்னை போயிட்டு இருக்கும்போது ஒரு பொதுவெளியில திரிஷாவை கூட்டிட்டு வந்தது ரொம்ப அதிர்ச்சியான ஒரு விஷயமா இருந்தது. முதலில் திரிஷா வீட்டில் இருந்து விஜய் வெளியில வரட்டும் என நயினார் நாகேந்திரன் சொல்லியிருந்தார். அதுக்கு நானே கண்டனம் தெரிவித்தேன். அவரும் மன்னிப்பு கேட்டுவிட்டார்.

விஜய்யின் மனைவி சங்கீதாவும், விஜய் ஒரு நடிகையுடன் உறவில் உள்ளார் எனவும் தேவைப்பட்டால் தான் அந்த நடிகையோட பேரைச் சொல்லுவேன் எனவும் அவங்க ரொம்ப கண்ணியமா ஒரு அறிக்கை கொடுத்திருந்தாங்க. அவர் இவ்வளவு கண்ணியமா நடந்துட்டு இருக்கும்போது, மேடையேறி மகளிர் தினத்தன்று பெண்ணியம் பேசி, கண்ணியம் இல்லாம ஒரு கல்யாணத்துக்கு திரிஷாவை கூட்டிட்டு வராருன்னு சொன்னா, சமுதாயம் எப்படிப் பார்க்கும். நாளைக்கு ஒரு சிஎம் ஆகணும்ன்ற கனவோட இருக்காரு. மக்கள் அவ்வளவு கனவோட இருக்காங்க அவரை சிஎம் ஆக்கணும்னு. உள்ள இருந்து பாக்கற உங்களுக்கு தெரியாது உங்களுக்கு பின்னாடி எவ்வளவு பேர், எவ்வளவு உழைப்பு போட்டுட்டு இருக்காங்கன்னு. உங்களுக்காக உழைப்பதற்கு கொஞ்சமாவது மரியாதை கொடுக்க வேண்டும். எல்லாப் பிரச்னையிலும் உங்களுக்கு முட்டுக் கொடுக்கிறோம்.

கரூர் விஷயத்தில இருந்து எல்லா விஷயத்திலயுமே எங்க அண்ணா பண்ணா சரியாதான் இருக்கும்னு சொல்றாங்க. மாற்றம் வேணும்னு கேட்கிறார்கள். அப்போ அந்த மாற்றம் கொடுக்கிற, விஜய் இப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவார்ன்றது ரொம்ப அதிர்ச்சியான ஒரு விஷயமா இருக்கு. 25 வருஷம் வாழ்ந்து ரெண்டு பிள்ளைகளை பெத்த மனைவிக்கே வந்து பாக்குறதுக்கு அனுமதி இல்ல. அனுமதிக்க முடியாதுனு இன்னொரு நபர் அங்க நடுவுல நிக்கிறாரு. அம்மா அப்பா போய் பார்க்க முடியல. அப்போ விஜய் நீங்க யாரு? ஏன் உங்களுக்கு இவ்வளவு போர்வை? எதுக்காக இவ்வளவு தடை.

மற்ற பெரிய நடிகர்கள் சமூகத்தில் சற்று தள்ளி இருந்தாலும், குடும்பத்துடன் நெருக்கமாக இருப்பார்கள். எதுக்காக இந்த மர்ம வாழ்க்கை? அவரது மனைவியாவது நாகரிகமா பேர குறிப்பிடல, நீங்க ஆளையே கூட்டிட்டு ஜோடியா வந்து காட்டுறீங்க. தமிழக மக்களுக்கு, நாளைய இளைஞர்களுக்கு அது நல்ல எடுத்துக்காட்டா? 1000 பிரச்னை போயிட்டு இருக்கு. இங்க சிபிஐ விசாரனை இருக்கு, அங்க படம் ரிலீஸ் ஆகல. பெண்கள் எல்லாம் உங்க மேல உயிர வச்சிருக்கோம்.

நாளைய சமுதாயம் உங்கள முதல்வரா உட்கார வைக்கனும்னு நினைச்சிட்டு இருக்கோம். நீங்க கூலா ஒரு நடிகைய கூட்டிட்டு வந்து உட்காந்துட்டு இருக்கீங்க. என்ன சொல்ல வர்றீங்க மக்களுக்கு?. அவர் பத்திரிக்கையாளர்களை சந்திக்காதது மாதிரியான பிற விஷயங்களை ஏற்றுக்கொண்டோம். அதுனால இதனையும் மக்கள் ஏத்துப்பாங்கன்னு நினைச்சுட்டாரா. நம்ம என்ன பண்ணாலும் ஏத்துப்பாங்க என்ற ஆணவமா? மக்களை முட்டாளாக நினைச்சுட்டாரா? இந்த மாதிரியான கேள்விகள் வருது. ஆனால் மக்கள் முட்டாள்கள் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.

* விஜய்-திரிஷா ஜோடி போட்டு சங்கீதாவை வெறுப்பேத்துறாங்க… பெண்கள் விஷயத்தில் ஒழுக்கம் வேணும்!

‘‘தமிழ்நாடே கொதிச்சிட்டு இருக்கும்போது திரிஷாவுக்கு தெரியாதா? இவ்ளோ பிரச்னை போயிட்டு இருக்கே, இவருக்கு இப்படி ஒரு பிரச்னை இருக்குன்னு தெரியாதா? அப்ப தெரிஞ்சே பண்றாங்கன்னா விஜய் மனைவிய வெறுப்பேத்தணும்னு பண்றாங்க. இதுக்கு விஜய்யும் உடந்தையா? ஒரு பெண்ணுக்கு பெண் பண்ணலாங்க. அதுவே அசிங்கம். ஆனால் கணவனே வந்து வெறுப்பேத்த பண்றது சரியானது இல்லை.

உங்க அண்ணனுக்காக கை தட்டுனீங்களே, அப்ப உங்க வீட்ல ஒருத்தர் வந்தா ஏத்துப்பீங்களா?’ அப்படின்றத விஜய்யை ஆதரிக்கும் பெண்கள் கிட்ட கேட்கணும். எல்லாத்துக்குமே திமுகதான் இருக்குதுன்னு சொன்னா என்னங்க? ஒருத்தர் மனைவியை இயக்குவது இன்னொரு கட்சின்னு சொன்னா இதைவிட அசிங்கம் வேறதாவது இருக்கா? ஏன் அப்படி அசிங்கப்படுத்துறீங்க. தவெக ‘வல்கர் வாரியர்ஸ்’ ரொம்ப வெறித்தனமா சங்கீதாவ தப்பு தப்பா பேசுறாங்க. இதக் கூட கண்டிக்க மாட்டறாரு. அப்ப யாருக்காகத்தான் நிக்கப்போறார் அவர்? எந்தப் பெண்ணுக்காக நிக்கப்போறாரு?’’ என்று ரஞ்சனா நாச்சியார் தெரிவித்தார்.

‘‘தனிப்பட்ட வாழ்க்கையா இருந்தா அவர் ரூம்குள்ள வச்சிருக்கணும். அவர் என்னைக்கு பொது வழியில கூட்டிட்டு வர ஆரம்பிச்சிட்டாரோ, அப்ப வந்து என்னோட தலைவரை நான் கேள்வி கேட்பேன். எனக்கு தலைவர் இப்படி இருக்கக்கூடாது, ஒழுக்கமா இருக்கணும். என்னோட லீடர் ஒரு பெண்ணோட வாழ்றாருன்னா அந்தப் பெண்ணை காப்பாத்துறாரான்னு நான் பார்ப்பேன். அவரோட மனைவியவே காப்பாத்தல அப்படின்ற பட்சத்துல எப்படி நீங்க எங்களை காப்பாத்துவீங்க? உன் கட்சி நிர்வாகி கார்ல வந்து விழுந்தாலே அவளை காப்பாத்துனீங்களா? விஷம் குடிச்சு கிடந்தாளே, அவளைப் போய் பார்த்தீங்களா? இல்லை இல்லை.

ஒரு பெண்ணுக்கு நிர்வாகிக்கு ஒன்னுனாலும் நீங்க கேட்க மாட்டீங்க, கட்டின மனைவிக்கு ஒன்னுனாலும் கேட்க மாட்டீங்க. எது பண்ணாலும் நியாயம்னு கை தட்டுற பெண்கள் எல்லாம் ஆதரிக்கிறாங்க. அதனால இதை எல்லாப் பெண்களும் ஆதரிக்கிறாங்கன்னு நீங்க நினைக்காதீங்க. எந்தப் பெண்ணும் ஆதரிக்க மாட்டாங்க. கூட்டம் வர்றத பார்த்து இத எல்லாம் ஆதரிக்கிற கூட்டம்னு நினைக்காதீங்க’’ என்று ரஞ்சனா நாச்சியார் தெரிவித்தார்.

* இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறார்

‘‘விஜய்யின் இந்தச் செயல் இளைஞர்களை தவறாக வழிநடத்தும். விஜய் என்ன பண்ணாலும் ட்ரெண்ட். விஜய்-திரிஷா போட்டு வந்த காஸ்டியூம் இன்னைக்கு ட்ரெண்ட், அவ்ளோ எக்ஸ்பென்சிவ். இன்னைக்கு அது ஒரு சேல்ல போய்க்கிட்டு இருக்கு, விஜய்-திரிஷா ட்வினிங் காஸ்டியூம்னு. இதெல்லாம் தேவையா? இந்த கலாச்சார சீர்கேடு எங்கிருந்து வருது? இப்படி ஒரு தனிமனித ஒழுக்கம் வந்து ஒரு லீடருக்கு இருக்கலை அப்படின்னு சொன்னா நாளைய சமுதாயத்துக்கு எப்படி இருக்கும். விஜய் தொண்டர்களுக்காக, தன்னோட குடும்பத்துக்காக நிக்கணும். தான் படம் ரிலீஸ் ஆகல, அதுக்காக நிக்கணும். கொள்கைத் தலைவர்களை விஜய் பின்பற்றுவதில்லை’’ என்று ரஞ்சனா நாச்சியார் தெரிவித்தார்.

Tags : Vijay ,Thaveka ,Ranjana Nachiyar ,
× RELATED இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு கடத்தல்: 6 கிலோ தங்கம் பறிமுதல்