- தேவன்
- முருகன்
- அமைச்சர்
- சேகர்பாபு
- கும்பகோணம்
- சுவாமிநாதன்
- சுவாமி
- கோவில்
- சுவாமிமலை, தஞ்சாவூர் மாவட்டம்
கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில் உள்ள நான்காம் படைவீடான சுவாமிநாத சுவாமி கோயிலில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பக்தர்களுக்காக ரூ.3.55 கோடி மதிப்பில், ஒரே நேரத்தில் 884 கிலோ எடை தாங்கும், 13 பேர் வரை செல்லும் வகையில் நவீன வசதிகளுடன் 2 லிப்ட் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பங்கேற்று லிப்ட்களை துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பழனி அடிவாரத்தில் பக்தர்களின் வருகைக்கு நெருக்கடியாக இருந்த ஆக்கிரமிப்புகளை நீக்கி முழுமையாக அந்த கோயிலுக்கு குடமுழுக்கு கண்ட ஆட்சி இந்த ஆட்சி. அதே போல் திருச்செந்தூரில் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு ரூ.450 கோடியில் குடமுழுக்கு நடத்தி உள்ளோம். ஏதாவது ஒரு வகையில் ஆன்மிகத்தை கையில் எடுத்து அரசியல் செய்ய நினைக்கும் சக்திகளுக்கு மத்தியில் திருப்பரங்குன்றத்தில் வரலாறு காணாத அளவிற்கு குடமுழுக்கு நடத்தியுள்ளோம்.
4ம் படைவீடான சுவாமிமலையில் மின்தூக்கி அமைக்க 30 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிட்டார்கள். இப்போது தான் நிறைவேறி உள்ளது. திராவிட மாடல் ஆட்சி தொடர தமிழ் கடவுள் முருகன் எங்களோடு கைகோர்த்து இருப்பார். இந்து சமய அறநிலையத்துறையை பொறுத்த வரை, கோயிலை வியாபார ஸ்தலமாக மாற்றுகிறார்கள் என்றால் சட்டத்திற்கு உட்பட்டு அந்த கோயில்களை இந்து சமய அறநிலையத்துறைக்கு கீழ் கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
