குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் நடந்த மகளிர் தின விழாவில் அதிமுகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருமணமான பெண்கள் வாழ்வில் விவாகரத்து என்பது மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும். மிகுந்த கஷ்டகாலமாக இருக்கும். இதை ரொம்ப ஈசி என சொல்வது வேதனையாக இருக்கிறது. தவெக தலைவர் விஜய், இன்னும் அரசியல் தலைவராக மாறவில்லை. அவர் நடிகராகவே இருக்கிறார். நானும் அவருக்கு தீவிர ரசிகை தான். ஆனால் நடிப்பு போல் அரசியலை நினைக்கிறார்.
ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை யாரும் விமர்சிக்க கூடாது. அதே நேரத்தில் நீங்கள் வெறும் நடிகராக மட்டும் இருந்தால் பிரச்னை இல்லை. இப்போது அரசியல் களத்துக்கு வந்துள்ளீர்கள். ஒரு கட்சியின் தலைவராக இருக்கீங்க. உங்களுக்கு ஒழுக்கம் ரொம்ப அவசியம். விஜய், சங்கீதா இடையே என்ன நடந்தது என்பது நமக்கு தெரியாது. அது அவுங்க இரண்டு பேர் சம்பந்தப்பட்ட விஷயம். நீதிமன்றத்துல சங்கீதா மனு தாக்கல் செய்திருக்காங்க. நீதிமன்றம் விசாரித்து முடிவு எடுக்கும். அதில் யாரும் எந்த கருத்தும் சொல்ல கூடாது.
அதே நேரத்துல மனைவி விவாகரத்து கேட்டு மனு செய்திருக்கும் நிலையில், நீங்கள் ஒரு அரசியல் தலைவராக இருந்து கொண்டு இன்னொரு பெண்ணை கூட்டிட்டு அவ்வளவு சாதாரணமாக வெளியில வர்றீங்க என்றால், உங்களை நம்பி இருக்கிற இளைஞர்களுக்கு, இளம்பெண்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க. ஒரு பெண்ணை திருமணம் செய்துட்டு அவ்வளவு ஈசியா விவகாரத்து செய்திடலாம் என்ற எண்ணத்தை நீங்கள் உங்க கூட்டத்துக்கு சொல்றீங்களா.
விஜய் ஒரு நடிகர் என்பதில் இருந்து மாறி, அரசியல் கட்சி தலைவர் என்பதை உணர வேண்டும். நல்ல வழி காட்டியாக இருக்க வேண்டும். நயினார் நாகேந்திரன் இந்த விவகாரத்தை பேசும் போது, எல்லோரும் எதிர்ப்பு தெரிவிச்சாங்க. இப்போது வெளிப்படையாக வெளியே வந்து இருக்கு. யாரும் மன வருத்தம் அடையும் வகையில் விஜய் செயல்பட கூடாது. கூட்டணி இல்லாமல் தனித்து ஜெயிக்கலாம் என்று விஜய் நினைக்கிறாரு. ரசிகர்கள் ஓட்ட வச்சு ஜெயிக்க முடியாது. விஜய் அதிமுக கூட்டணிக்கு வரணும். அவரு கூட்டணி வச்சா ஜெயிப்பாரு. இவ்வாறு அவர் கூறினார்.
