×

ராஜமங்கலத்தில் மாயமான ஐடி பெண் ஊழியர் புழல் ஏரி அருகில் சடலமாக மீட்பு: கொலையா? போலீஸ் விசாரணை

புழல்: சென்னை ராஜமங்கலம் பகுதியில் மாயமான ஐடி பெண் ஊழியர் புழல் ஏரி அருகில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புழல் அறிஞர் அண்ணாநகர் பகுதியில் இரட்டை ஏரி உள்ளது. இந்த ஏரியின் பின்புறம் தேங்கியுள்ள தண்ணீரில் பெண் சடலம் மிதப்பதாக புழல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி போலீசார் மற்றும் மாதவரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஏரியின் பின்புறம் தண்ணீரில் சடலமாக மிதந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி விசாரித்தபோது, மீட்கப்பட்ட பெண்ணுக்கு 25 வயது இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து உடற்கூறு ஆய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பெண்ணின் சடலத்தை அனுப்பி வைத்தனர்.

மேலும் சென்னை ராஜமங்கலம் மேட்டு தெருவை சேர்ந்த ஆஷா கீர்த்தி (26) என்பதும், ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. கடந்த 5ம்தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற ஆஷா கீர்த்தி வீடு திரும்பவில்லை என ராஜமங்கலம் காவல்நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்துள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது அடித்து கொலை செய்து தண்ணீரில் வீசிவிட்டு சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் புழல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : WORM ,LAKE ,RAJAMANGALA ,Worm Lake ,Rajamangalam ,Chennai ,Annanagar ,Maghal Scholar ,
× RELATED சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலத்தில் 2 பேர் வெட்டிக் கொலை!