நாகர்கோவில்: வடசேரியில் உள்ள வங்கியில் போலி நகையை அடகு வைத்து ரூ.2.10 கோடி வரை மோசடி செய்ததாக வங்கியின் நகை மதிப்பீட்டாளர் ரகுவரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வங்கியில் இருந்த நகைகளை அதிகாரிகள் தணிக்கை செய்தபோது சில நகைகள் போலி என தெரிய வந்தது. போலி நகைகள் என தெரிய வந்ததை அடுத்து நகை மதிப்பீட்டாளர் ரகுவரன் மீது போலீசில் வங்கி மேலாளர் புகார் அளித்ததன் அடிப்படையில் ரகுவரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
