×

சுற்றுலாவுக்கு அழைத்து சென்ற இடத்தில் பலாத்கார முயற்சி டிரைவரிடம் உயிர்தப்பிய இளம்பெண்: விடிய விடிய காட்டிற்குள் நடந்த பயங்கரம்

நைனிடால்: சுற்றுலா பயணியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற டாக்ஸி டிரைவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். டெல்லியைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர் கடந்த 5ம் தேதியன்று உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலுக்கு தனியாக சுற்றுலாவுக்கு புறப்பட்டார். நள்ளிரவு 11 மணியளவில் காத்கோடமில் இருந்து நைனிடால் செல்வதற்காக ஒரு டாக்ஸியை வாடகைக்கு எடுத்தார். அந்த காரை ஹல்த்வானியைச் சேர்ந்த தீபக் சிங் போரா (39) என்பவர் ஓட்டிச் சென்றார். கடந்த 6ம் தேதியன்று அதிகாலை 1.30 மணியளவில் நைனிடாலுக்கு 10 கி.மீ தொலைவில் உள்ள பல்டியாக்கான் பகுதியில் கார் சென்றபோது, டிரைவர் திடீரென ஆள்நடமாட்டமற்ற பட்வா டங்கர் பகுதிக்கு காரைத் திருப்பினார்.

இதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்தபோது, டிரைவர் அவரை தாக்கி செல்போனை பறித்துக்கொண்டார். பின்னர் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். டிரைவரிடமிருந்து தப்பிக்க போராடிய அந்த பெண், காரில் இருந்து குதித்து அருகில் இருந்த அடர்ந்த காட்டுக்குள் ஓடினார். டிரைவர் துரத்தியும் சிக்காமல் இரவு முழுவதும் காயங்களுடன் காட்டில் மறைந்திருந்து உயிர் தப்பினார். விடிந்த பிறகு பட்வா டங்கர் கிராமத்திற்கு வந்த அந்த பெண்ணை உள்ளூர் பெண்கள் மீட்டு தாலிட்டல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து நைனிடால் எஸ்எஸ்பி மஞ்சுநாத் டிசி கூறுகையில், ‘சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் சிசிடிவி காட்சிகள் மற்றும் ஜிபிஎஸ் கருவி உதவியுடன் குற்றவாளியை தேடினோம். அந்த காரை பறிமுதல் செய்து, தலைமறைவாக இருந்த தீபக் சிங் போராவை போவாலி பகுதியில் கைது செய்தோம்’ என்றார்.

Tags : Nainital ,Delhi ,Nainital, Uttarakhand ,
× RELATED சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலத்தில் 2 பேர் வெட்டிக் கொலை!